Drancyயில் கொடூர சம்பவம்: தாயும் ஒரு மாதக் குழந்தையும் உயிரிழப்பு - கணவர் தலைமறைவு!!
17 புரட்டாசி 2026 வியாழன் 22:08 | பார்வைகள் : 3020
Drancy நகரில் இன்று செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. la rue Barbusse இல் உள்ள குடியிருப்பு ஒன்றில் சுமார் 30 வயதுடைய பெண்ணும், அவருடைய ஒரு மாதக் குழந்தையும் உயிரிழந்த நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற குடியிருப்பில் இருவரும் தனியாக இருந்ததாக விசாரணைக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மீது காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்களின் அடிப்படையில், இந்த இரட்டைக் கொலை சம்பவத்துக்கு அவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், பெண் மற்றும் குழந்தை கத்தியால் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விசாரணை முடிவடையாத நிலையில் சம்பவத்தின் முழுமையான பின்னணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகிக்கப்படும் அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தாய் மற்றும் ஒரு மாதக் குழந்தையின் மரணம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகளின் முழுமையான சூழ்நிலையை கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



