இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை; பாமக

இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை;  பாமக

19 புரட்டாசி 2026 சனி 11:12 | பார்வைகள் : 209


மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், இந்த இடைத்தேர்தலில் பாமக தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். அதேபோல், பாமகவின் ஆதரவைப் பெற தவெகவும் முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பாமக மாநில நிர்வாகிகள் மற்றும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க