“ஒரு வருடத்திற்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த வேண்டும்” – Éric Zemmour!!

“ஒரு வருடத்திற்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த வேண்டும்” – Éric Zemmour!!

18 புரட்டாசி 2026 வெள்ளி 22:50 | பார்வைகள் : 3131


Reconquête கட்சியின் தலைவர் Éric Zemmour, செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வியாழக்கிழமை, நீண்டகாலமாக வேலையில்லாமல் இருக்கும் வெளிநாட்டவர்களை பிரான்ஸிலிருந்து நாடு கடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஒருவர் பிரான்ஸில் வசித்து ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தால், அவரை நாடு கடத்த வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என அவர் கூறினார்.

“ஒரு வெளிநாட்டவர் பொது நிதிக்கு சுமையாக இருக்கக்கூடாது” எனக் கூறிய Éric Zemmour, இதற்கான காலவரம்பாக “ஒரு வருடம் வேலையின்மை” என்பதை முன்வைத்தார். ஒருவர் பிரான்ஸில் 20 ஆண்டுகளாக வசித்து வந்தாலும் இந்த விதி பொருந்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், பிரஞ்சு சிறைகளில் உள்ள வெளிநாட்டவர்களையும், குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களையும், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களையும் நாடு கடத்த வேண்டும் என Éric Zemmour மீண்டும் வலியுறுத்தினார். அதேபோல், சமூக உதவித்தொகைகளை மட்டுமே நம்பி வாழும் நீண்டகால வேலையற்ற வெளிநாட்டவர்களும் பிரான்ஸிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படிக்க