Essonne இல் அதிர்ச்சி சம்பவம் - lycée மீது mortier தாக்குதல்; பலர் கைது!!

Essonne இல் அதிர்ச்சி சம்பவம் - lycée மீது mortier தாக்குதல்;  பலர் கைது!!

19 புரட்டாசி 2026 சனி 07:37 | பார்வைகள் : 1378


Essonne மாகாணத்தின் Les Ulis பகுதியில் உள்ள lycée L’Essouriau பாடசாலையில் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் பரபரப்பு ஏற்பட்டது. பாடசாலைக்கு மிக அருகில் mortier குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 1,000 மாணவர்கள் கல்வி பயிலும் இந்தப் பாடசாலையில், மாணவர்கள் சுமார் ஒரு மணி நேரம் வகுப்பறைகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். 

சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக பாடசாலைக்கு விரைந்ததுடன், வளாகத்திலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்ததாக பெற்றோர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சில ஆசிரியர்கள் சம்பவத்திற்குப் பின்னரும் அச்சம் காரணமாக வகுப்புகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. mortier குண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

தொடர்ந்து படிக்க