இடைத்தேர்தல் 2 தொகுதிகளில் 9 நாள் பிரசாரம்: சீமான் திட்டம்

இடைத்தேர்தல் 2 தொகுதிகளில் 9 நாள் பிரசாரம்: சீமான் திட்டம்

20 புரட்டாசி 2026 ஞாயிறு 09:04 | பார்வைகள் : 1270


இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை முதல் அக்., 4ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

**நா.த.க., வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:**

இடைத்தேர்தலை முன்னிட்டு, நாளை முதல் அக்., 4ம் தேதி வரை சீமான் பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி, நாளை முதல் 23ம் தேதி வரை தாராபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதுராந்தகம் தொகுதியில் வரும் 26, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து, மீண்டும் தாராபுரம் தொகுதியில் அக்., 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு நா.த.க., அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்ந்து படிக்க