தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்; நிதியமைச்சர் மரிய வில்சன்
20 புரட்டாசி 2026 ஞாயிறு 12:15 | பார்வைகள் : 7848
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும் என, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், **‘வளர்ந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு நிதியளித்தல்’** என்ற தலைப்பில் மாநில நிதியமைச்சர்கள் மாநாடு டில்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற மரிய வில்சன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சி, பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியையும், ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகையையும் விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுகுறித்து மரிய வில்சன் வெளியிட்ட அறிக்கையில், **‘டில்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகளை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை அளித்தேன். மாநில நிதியுரிமை, பேரிடர் நிவாரண நிதி, முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்களிப்பு மற்றும் நியாயமான வரிப் பகிர்வு தொடர்பான கருத்துக்களை முன்வைத்தேன்’** என தெரிவித்துள்ளார்.



