இசைஞானியின் இசை ஆஸ்கர் களத்தில் !

இசைஞானியின் இசை ஆஸ்கர் களத்தில் !

20 புரட்டாசி 2026 ஞாயிறு 06:40 | பார்வைகள் : 1964


அன்னக்கிளி திரைப்படம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இசைஞானி இதுவரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். 80களில் இளையராஜாவின் இசையை நம்பிய பல திரைப்படங்களும் உருவானது. இப்போதும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இளையராஜா இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். அவர் இசையமைக்க சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ரவீனா ஆகிய மூன்று படங்களுக்கும் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது..

அதேநேரம் இளையராஜா இதுவரை ஆஸ்கர் பக்கம் சென்றதில்லை. ஆனால் அவரின் சிஷ்யன் ஏ.ஆர் ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுவிட்டார். இந்நிலையில்தான், 2027ம் ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் இளையராஜா இசையமைத்த ‘கோந்தல்’ என்கிற மராத்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வ பரிந்துரையாக இந்த படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கு விருது கிடைத்தால் இளையராஜா ஆஸ்கார் விருதை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படிக்க