இறால் வறுவல்..
20 புரட்டாசி 2026 ஞாயிறு 06:53 | பார்வைகள் : 275
கடல் உணவுகளில் இறாலுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக கடற்கரை ஓர உணவகங்களில் கிடைக்கும் மசாலா பூசப்பட்ட இறால் வறுவல், அதன் காரம் மற்றும் மணத்தால் மீன் பிரியர்களை வெகுவாக கவரும். அதே சுவையில், அதிக சிரமமின்றி வீட்டிலேயே இறால் தலா ஸ்பிரை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
.
தேவையான பொருட்கள்;-
இறால் மீன், மஞ்சள் தூள், குழம்பு தூள், மிளகாய் தூள், உப்பு, எழுமிச்சை பழம், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய்.
இறால் தவா ஸ்பிரை செய்முறை;-
இறாலின் தோல் மற்றும் குடலை நீக்கி சுத்தம் செய்து விட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கழுவிக் கொள்ளவும்.
பின் அதே இறாலில் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் குழம்பு தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் எழுமிச்சை சாற்றினை சேர்த்து விட்டு கருவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொண்டு நன்றாக மசாலா முழுவதும் படும்படி பெரட்டிக்கொண்டு அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பின் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கொண்டு, மசாலாக்கள் தடவிய இறாலை ஒவ்வொரு சேர்த்து மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை இரண்டு பக்கம் பெட்டி எடுத்து கொத்தமல்லி இலை தூவி பெரட்டினால் பீச் சைட் உணவகத்தில் கிடைக்க கூடிய இறால் வறுவல் அப்படியே இருக்கும் சுவையில் நாம் வீட்டில் ஈசியாவும், டக்குன்னும் சமைச்சிடலாம்



