2027ஆம் ஆண்டு APL கொடுப்பனவுகள் உயர்த்தப்படாது – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

2027ஆம் ஆண்டு APL கொடுப்பனவுகள் உயர்த்தப்படாது – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

20 புரட்டாசி 2026 ஞாயிறு 08:04 | பார்வைகள் : 1364


“அனைவரிடமும் சிறிய அளவிலான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ள நகரம் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் Vincent Jeanbrun, 2027ஆம் ஆண்டில் APL (தனிப்பட்ட வீட்டு உதவித்தொகை) தொகை உயர்த்தப்படாது என  செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை அறிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் 54 பில்லியன் யூரோக்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“APL தொகையை குறைக்கப் போவதில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அது மறுமதிப்பீடு செய்யப்படாது” என அமைச்சர் கூறினார். இதன் மூலம் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப APL தொகை 2027ஆம் ஆண்டு அதிகரிக்காது. அரசுக்கு கணிசமான சேமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் APL தொகையை முடக்குவதும் ஒன்றாகும் என Vincent Jeanbrun குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் APL, பிரதான குடியிருப்புக்கான வாடகைச் செலவை சமாளிக்க உதவுகிறது. இந்த உதவித்தொகை பெரும்பாலும் Caisse nationale d’allocations familiales (Cnaf) மூலம் வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் APLக்காக சுமார் 17 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டின் Cour des comptes தகவலின்படி, ஒரு பயனாளிக்கு மாதத்திற்கு சராசரியாக 219 யூரோக்கள் உதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க