த.வெ.க., நட்சத்திர பேச்சாளர் பட்டியலுக்கு அ.தி.மு.க., கண்டனம்

த.வெ.க., நட்சத்திர பேச்சாளர் பட்டியலுக்கு அ.தி.மு.க., கண்டனம்

21 புரட்டாசி 2026 திங்கள் 07:58 | பார்வைகள் : 1386


இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக த.வெ.க., வெளியிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சட்டத்திற்கு எதிரானது என பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதன் விபரம்:

அ.தி.மு.க., எம்.பி., இன்பதுரை:

தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எந்தச் சட்டத்தின் அடிப்படையில் மற்றொரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்?

தேர்தல் அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பிரசாரம் செய்தால், தேர்தல் கமிஷன் விதிகளின்படி அவர்களின் பிரசார செலவு முழுவதும் த.வெ.க., வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

பா.ஜ., தமிழக செயலர் தியாகராஜன்:

த.வெ.க., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், வி.சி.க., தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, துரை வைகோ, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 77-ன்படி, நட்சத்திர பேச்சாளர்களாக அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களை மட்டுமே அறிவிக்க முடியும். ஆனால், பிற கட்சியினரின் பெயர்களையும் உள்ளடக்கிய த.வெ.க., பட்டியலை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது.

இதன் மூலம் தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க