125,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள், பணம் - ஆடம்பர நட்சத்திர விடுதியில் நடந்த துணிகர திருட்டு!!

125,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள், பணம் - ஆடம்பர நட்சத்திர விடுதியில் நடந்த துணிகர திருட்டு!!

21 புரட்டாசி 2026 திங்கள் 07:16 | பார்வைகள் : 1619


பரிசில் 8ஆம் வட்டாரத்தில் உள்ள ஆடம்பர  தங்கும் விடுதி ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவரின் பயணப் பெட்டி பட்டப்பகலில் திருடப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில் La Demeure Montaigne தங்கும் விடுதி நுழைவுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாடிக்கையாளர் கண்காணிப்பின்றி வைத்திருந்த பயணப் பெட்டியை, வலுவான உடல்வாகு கொண்டதாகக் கூறப்படும் ஒருவர் கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளபடி எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவலின்படி, பெட்டியில் விலைமதிப்புமிக்க நகைகளுடன் 50,000 யூரோக்கள் மதிப்புள்ள ரொக்கப் பணமும் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் 125,000 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை 8ஆம் வட்டார காவல் நிலையத்தின் SAIP பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

தொடர்ந்து படிக்க