விஜய்யை சீண்டும் விஜய்சேதுபதி?

விஜய்யை சீண்டும் விஜய்சேதுபதி?

21 புரட்டாசி 2026 திங்கள் 16:25 | பார்வைகள் : 1236


பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 10 தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கடந்த வார நிகழ்வுகள் குறித்து போட்டியாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, "ஹனிமூன் பீரியட் முடிந்துவிட்டது; இனியும் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது" என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிக் பாஸ் வீடு ஒரு சட்டமன்றத்தை பிரதிபலிக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டு செயல்பட்டு வரும் சூழலில், இந்த வார்த்தைகள் அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டு தவெக மற்றும் முதல்வர் விஜய் அவர்களை குறிப்பதாச் சில தரப்பினர் சமூக வலைதளங்களில் இந்த விடியோவை வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் வார இறுதி நாளான நேற்று,   அவர், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உங்களுக்கான ஹனிமூன் காலம் முடிந்துவிட்டதாகவும் எச்சரித்தார்.

இதனைத் தவெக ஆட்சியைக் குறிப்பிடும் விதமாக இருப்பதாகக் கருதி ஒரு தரப்பினர் விமர்சித்து வந்தாலும், கடந்த வாரமும் இதேபோல் அவரது பேச்சு அரசியல் ரீதியாகத் திசை திருப்பப்பட்டபோது, இது முழுக்க முழுக்க பிக் பாஸ் வீட்டுப் போட்டியாளர்களை மேம்படுத்துவதற்கானது என்று விஜய் சேதுபதியும் தொலைக்காட்சி நிர்வாகமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படிக்க