குழந்தைகள் காப்பகங்களுக்கு பெரும் நிதியுதவி – 90 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!!

குழந்தைகள் காப்பகங்களுக்கு பெரும் நிதியுதவி – 90 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!!

21 புரட்டாசி 2026 திங்கள் 20:08 | பார்வைகள் : 1297


சிறு குழந்தைகளுக்கான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 90 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான “அவசரத் திட்டத்தை” சுகாதார அமைச்சர் Stéphanie Rist செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இந்த நிதி குறிப்பாக சவாலான பகுதிகளில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகங்களுக்கு ஆதரவளிப்பதுடன், தனிப்பட்ட குழந்தைப் பராமரிப்பு சேவைகளையும் வலுப்படுத்தும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து குடும்பங்களுக்கும் அணுகக்கூடிய மற்றும் தரமான குழந்தைப் பராமரிப்பு வசதிகளைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக 2026ஆம் ஆண்டில் 30 மில்லியன் யூரோக்களும், 2027ஆம் ஆண்டில் மேலும் 60 மில்லியன் யூரோக்களும் முதலீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தைகள் காப்பகங்களின் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் Prestation de service unique (PSU) நிதி உதவி மீண்டும் உயர்த்தப்படவுள்ளது. அதேவேளை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களுக்கு கூடுதல் “bonus territoire” நிதி வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படிக்க