வெற்றி பயணம் திட்டம்: அக்., 2 முதல் தொடக்கம்
22 புரட்டாசி 2026 செவ்வாய் 10:14 | பார்வைகள் : 17074
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 'வெற்றி பயணம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டம் வரும் அக். 2 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இதன்படி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.,க்கு மேற்பட்ட மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் என மொத்தம் 12 ஆயிரத்து 692 பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் துறை அமைச்சர் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், நிதித்துறை செயலர் சித்திக், துறை செயலர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



