வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட மத்திய அரசு வேண்டுகோள்
22 புரட்டாசி 2026 செவ்வாய் 12:18 | பார்வைகள் : 13450
வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு (யு.எப்.பி.யு.) சார்பில் வரும் 28 முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே, வங்கி ஊழியர் சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கையும் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
ஊழியர் சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், வங்கி ஊழியர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, வங்கிச் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.



