உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு தீர்ப்பு இன்று
22 புரட்டாசி 2026 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 413
உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
இதன்படி, இவ்வழக்கின் பிரதான சந்தேகநபரான நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதலை நடத்தி மனிதப் படுகொலைகளைப் புரிந்தமை, கொடூரமான முறையில் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் நீதிபதி இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
தீர்ப்பு வழங்கப்படும் இன்றைய நாளில் பொலிஸார் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.



