உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிப்பு
22 புரட்டாசி 2026 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 684
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய ஆயத்தினால் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, சந்தேக நபர்களான பெயரிடப்பட்ட 24 பேரில், 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதவேளை ஏனைய 9 பேரும் இந்த வழக்கில் இருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வாசிக்கும் நடவடிக்கை இன்று (22) மதிய உணவிற்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
இந்த தீர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பும் உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு வருகின்றது.



