தமிழகம் வருகிறார் ராகுல்; மாணவர்களுடன் கலந்துரையாட திட்டம்
23 புரட்டாசி 2026 புதன் 06:42 | பார்வைகள் : 253
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், 'மாணவர் குரல்' என்ற தலைப்பில் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல், கல்லுாரி மாணவ, மாணவியரை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
தமிழகத்தில் ராகுல் பங்கேற்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில் உள்ள காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நேற்று மாணிக்கம் தாகூர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ராகுலின் உதவியாளர் பைஜு மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ராகுலை தமிழகம் அழைத்து வந்து, கல்லுாரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது.



