பள்ளியில் ரூ.1.51 கோடி கையாடல்; திமுக நகராட்சி கவுன்சிலர் கைது

பள்ளியில் ரூ.1.51 கோடி கையாடல்; திமுக நகராட்சி கவுன்சிலர் கைது

23 புரட்டாசி 2026 புதன் 10:09 | பார்வைகள் : 3576


தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.100 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷின் உறவினரான வாளாடி கார்த்திக்கிடம் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

தி.மு.க., செய்தி தொடர்புக் குழு துணைத் தலைவரான அரசகுமார், 58, என்பவர், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.100 கோடிக்கு மேல் பணம் பெற்றதாகவும், பின்னர் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, அரசகுமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த மகேஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக மகேஷிடம் ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலமும் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கார்த்திக், 45, என்பவருக்கு போலீசார் ‘சம்மன்’ அனுப்பினர். இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

தி.மு.க.,வினரால் ‘வாளாடியார்’ என அழைக்கப்பட்டு வந்த கார்த்திக், முன்னாள் அமைச்சர் மகேஷின் நிழல் போல் செயல்பட்டு வந்துள்ளார். கார்த்திக் மற்றும் அரசகுமார் இடையே பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, கார்த்திக் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மகேஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
 

தொடர்ந்து படிக்க