கின்னஸ் சாதனை செய்த அட்லியின் ‘ராக்கா?

 கின்னஸ் சாதனை செய்த அட்லியின் ‘ராக்கா?

23 புரட்டாசி 2026 புதன் 13:08 | பார்வைகள் : 504


அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'ராக்கா' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

இப்படத்தின் ஒரு காட்சிக்காக ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின் அசைவுகளை நிகழ்நேரத்தில் மோஷன்-கேப்சர்   முறையில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 'அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் நிகழ்நேரத்தில் மோஷன்-கேப்சர் செய்யப்பட்டவை' என்ற பிரிவின் கீழ் இப்படம் கின்னஸ் உலக சாதனையை அதிகாரப்பூர்வமாகப் படைத்துள்ளது.

இதற்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ பெற்றுக்கொண்டனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பெருமையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், இந்திய சினிமா உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகவும் பெருமைக்குரிய தருணம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். மேலும், இந்தச் சாதனைப் பாடல் அல்லது காட்சி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டும் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
 

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நான்கு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், இரண்டு பிரபஞ்சங்களை அடிப்படையாகக் கொண்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன்  திரைப்படமாக இது உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள இந்த பிரம்மாண்டத் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படிக்க