காரசாரமான பனீர் மிளகு வறுவல்

காரசாரமான பனீர் மிளகு வறுவல்

23 புரட்டாசி 2026 புதன் 13:24 | பார்வைகள் : 1806


வீட்டில் பனீர் செய்தால் அனைத்து வயதினரும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள். இந்தியாவில் பனீர் வைத்து செய்யப்படும் உணவு வகைகள் ஏராளம். பன்னீரை நீங்கள் எப்படி செய்து சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.இது எவ்வளவு சுவை மிகுந்ததோ அதே அளவு இதில் கால்சியம், புரதச்சத்து என பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே பனீர் மற்றும் மிளகு வைத்து காரசாரமான பனீர் வறுவல் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
பனீர் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பனீர் துண்டுகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதன் பச்சை வாசம் போனவுடன் உங்கள் காரத்திற்கேற்ப மிளகு தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக மசாலாக்களின் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இது நன்கு கொதித்ததும் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிபோட்டு சமைக்கவும்.

இதிலுள்ள தண்ணீர் முழுவதும் வற்றி வறுவல் பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கினால் காரசாரமான பனீர் மிளகு வறுவல் ரெடி.

தொடர்ந்து படிக்க