“இளையராஜாவின் 50 ஆண்டு இசைச் சாதனை!”

“இளையராஜாவின் 50 ஆண்டு இசைச் சாதனை!”

23 புரட்டாசி 2026 புதன் 13:45 | பார்வைகள் : 795


ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியன் நாடாளுமன்றத்தில், அவரது நீண்ட காலச் சாதனையைப் பாராட்டும் விதமாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் தமிழ் இசையின் பெருமையை உயர்த்திய இந்தச் செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரை நூற்றாண்டு காலமாகத் தனது இசையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஆளுகம் செய்து வரும் இளையராஜாவின் கலைப்பயணத்திற்குச் சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வாய்ந்த நிகழ்வில் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு அஞ்சல் தலைகளை வெளியிட்டுத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தலைமுறை தாண்டிய இசையின் உன்னதத்தை வெளிப்படுத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. 

தொடர்ந்து படிக்க