நவம்பர் 20 முதல் வங்கிக் கணக்கு பணப்பற்றாக்குறை விதிகளில் மாற்றம்!!

நவம்பர் 20 முதல் வங்கிக் கணக்கு பணப்பற்றாக்குறை விதிகளில் மாற்றம்!!

23 புரட்டாசி 2026 புதன் 18:15 | பார்வைகள் : 4149


மாதந்தோறும் நான்கில் ஒருவருக்கு வங்கிக் கணக்கில் பணப்பற்றாக்குறை (découvert) ஏற்படும் நிலையில், வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி வங்கிக் கணக்கு découvert வசதியும், சில தவணை மற்றும் ஒத்திவைக்கப்பட்ட கட்டண வசதிகளும் நுகர்வோர் கடனாகக் கருதப்படும். இதனால் வங்கிகள் découvert வழங்குவதற்கு முன் வாடிக்கையாளரின் வருமானம், செலவுகள், ஏற்கனவே உள்ள கடன்கள் மற்றும் முந்தைய கட்டணப் பிரச்சினைகள் உள்ளிட்ட நிதிநிலையை ஆய்வு செய்ய வேண்டியிருக்கும்.

மேலும், découvert வழங்கப்படும் போது அதற்கான முழுமையான செலவு மற்றும் கட்டணங்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் போதுமானதாக இல்லை என வங்கி கருதினால், découvert வசதியை மறுக்க முடியும். அவ்வாறு மறுக்கப்பட்டால், கணக்கில் போதிய பணம் இல்லாத நிலையில் அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் உடனடியாக நிராகரிக்கப்படலாம். எனினும், ஏற்கனவே வழங்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் découvert அனுமதிகளுக்கு இந்த புதிய விதிகள் உடனடியாகப் பொருந்தாது. புதிய அனுமதி அல்லது வங்கி மாற்றம் செய்யத் திட்டமிடுபவர்கள் நவம்பர் 20க்கு முன்பாக நடவடிக்கைகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், கடைகளில் வழங்கப்படும் பல தவணைகளில் பணம் செலுத்தும் வசதி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட கட்டண முறைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகமாகின்றன. இத்தகைய வசதிகளை வழங்கும் வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கொள்வனவை அனுமதிப்பதற்கு முன் வாடிக்கையாளரின் பணம் செலுத்தும் திறனை மதிப்பிட வேண்டும். அதிகளவில் கடன் மற்றும் தவணை வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் அதிகப்படியான கடன்பட்ட நிலையைத் தடுப்பதும், நுகர்வோரைப் பாதுகாப்பதுமே இந்த புதிய விதிமுறைகளின் முக்கிய நோக்கமாகும்.

தொடர்ந்து படிக்க