புதிய வாழ்வு அளிக்கும் உறுப்பு தானம்; முதல்வர் விஜய் பதிவு

புதிய வாழ்வு அளிக்கும் உறுப்பு தானம்; முதல்வர் விஜய் பதிவு

24 புரட்டாசி 2026 வியாழன் 12:58 | பார்வைகள் : 929


உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்கு, தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும் புதிய வாழ்க்கையையும் வழங்குகிறது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழகம் உடலுறுப்பு தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உடலுறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்வது, உயர்ந்த மனிதநேயச் செயலாகும்.

உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்கு, தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும் புதிய வாழ்வையும் அளிக்கிறது. மனிதநேயத்தின் ஒளியை ஏந்தி, பல உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம்.

இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க