மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம்!

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம்!

25 புரட்டாசி 2026 வெள்ளி 09:03 | பார்வைகள் : 376


மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், 7,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல், அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

மரகதம் குமரவேலை ஆதரித்து, மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்துார் சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தில் இன்று பிற்பகல் தனது பிரசார வாகனத்தில் நின்றபடி முதல்வர் விஜய் பேச உள்ளார்.

இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 7,000 பேருக்கு 'கியூ.ஆர்.' குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

மரகதம் குமரவேல் பிரசாரம் செய்யும் இடங்களில் சிலர் பிரச்னைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவரது வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, தீவிர பிரசாரத்தின் வாயிலாக மரகதம் குமரவேலின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்ந்து படிக்க