அண்ணாமலைக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் உத்தரவு

25 புரட்டாசி 2026 வெள்ளி 11:09 | பார்வைகள் : 995


தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் தாக்கல் செய்த தனிநபர் வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, 2023ம் ஆண்டில் தமிழக பா.ஜ., தலைவராக இருந்தபோது, ''ஆத்திகர்களை நாத்திகர்கள் அவமதிப்பது தொடர்ந்தால், மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படும்'' என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 1956ல் பேசியதாக தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி, சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அண்ணாமலைக்கு எதிராக பியூஸ் மனுஷ் தாக்கல் செய்த தனிநபர் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
 

தொடர்ந்து படிக்க