தி.மு.க., அ.தி.மு.க. கள்ள கூட்டணி: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

தி.மு.க., அ.தி.மு.க. கள்ள கூட்டணி: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

25 புரட்டாசி 2026 வெள்ளி 12:12 | பார்வைகள் : 216


தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் கள்ள கூட்டணி வைத்துள்ளன'' என அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய காரணமே அக்கட்சியின் பொதுச்செயலர் இபிஎஸ் தான். அவரால் தான் 25 பேர் நம்பிக்கை ஓட்டெடுப்பில் த.வெ.க.விற்கு ஓட்டளித்தனர்.

இபிஎஸின் நடவடிக்கையும், முடிவும் நேர்மையாக இல்லை என்பதால் தான் சத்யபாமா த.வெ.க.வில் இணைந்தார்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கள்ள கூட்டணி வைத்துள்ளன. தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற இபிஎஸ் நினைத்ததால் தான் 6 பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

### அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், ''எந்தவொரு விஷயத்திலும் தி.மு.க.வின் நிலைப்பாட்டில் குழப்பமே உள்ளது. தி.மு.க.வினரின் தலைக்கு மேல் சி.பி.ஐ. வழக்குகள் உள்ளன.

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு இல்லை. இபிஎஸ் தலைமையை ஏற்று யாரும் அங்கு இல்லை; வேறு வழியின்றி இருக்கின்றனர்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கள்ள கூட்டணி அமைத்து, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முற்பட்டன. தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல், நேர்மைக்கும் துரோகத்துக்குமான போர்'' என்றார்.
 

தொடர்ந்து படிக்க