போப் லியோன் XIV வருகை: பரிசில் பல மெட்ரோ, RER நிலையங்கள் மூடல்!!
25 புரட்டாசி 2026 வெள்ளி 07:18 | பார்வைகள் : 1713
போப் லியோன் XIV-ன் பரிஸ் வருகையை முன்னிட்டு, செப்டம்பர் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பல மெட்ரோ மற்றும் RER நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட உள்ளன. வாகனப் போக்குவரத்தில் வியாழக்கிழமை முதலே கட்டுப்பாடுகள் ஏற்படும் நிலையில், பொதுப் போக்குவரத்து பாதிப்புகள் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடங்கும்.
வெள்ளிக்கிழமை 25 செப்டெம்பர்:
காலை 10 மணி முதல்:
Ligne 4: Vavin, Odéon, Cité
Ligne 10: Odéon, Duroc, Cluny-La Sorbonne
Ligne 13: Duroc, Saint-François-Xavier
RER B: Saint-Michel Notre-Dame, Port-Royal, Luxembourg
மதியம் 1 மணி முதல்:
Ligne 8: École Militaire
Ligne 10: Ségur
இரவு 10 மணி முதல்:
Ligne 1: Charles-de-Gaulle-Étoile, Concorde, Champs-Élysées, Franklin D. Roosevelt, George V, Tuileries, Argentine
Ligne 2: Charles-de-Gaulle-Étoile
Ligne 6: Charles-de-Gaulle-Étoile முதல் Kléber வரை
Ligne 8: Concorde
Ligne 9: Franklin D. Roosevelt
Ligne 12: Concorde
Ligne 13: Champs-Élysées
RER A: Charles-de-Gaulle-Étoile
சனிக்கிழமை 26 செப்டெம்பர்:
காலை 5.30 மணி முதல்:
Ligne 1: Charles-de-Gaulle-Étoile, Concorde, Champs-Élysées, Franklin D. Roosevelt, George V, Tuileries, Argentine
Ligne 2: Charles-de-Gaulle-Étoile
Ligne 6: Charles-de-Gaulle-Étoile முதல் Kléber வரை
Ligne 8: Concorde
Ligne 9: Franklin D. Roosevelt
Ligne 12: Concorde
Ligne 13: Champs-Élysées
RER A: Charles-de-Gaulle-Étoile
RER C: Pont de l’Alma
மதியம் 12 மணி முதல்:
Ligne 2: Ternes
Ligne 9: Saint-Philippe-du-Roule
இந்த நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் தொடருந்துகள் அந்த நிலையங்களில் நிற்காமல் செல்லும். இணைப்பு வசதிகளும் வழங்கப்படாது என RATP தெரிவித்துள்ளது. பேருந்து சேவைகளும் சில இடங்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவோ குறைக்கப்படவோ உள்ளன. பாதுகாப்பு நிலைமை அனுமதித்தவுடன் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்.
இதற்கிடையில், போப் லியோன் XIV-ன் வருகையால் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க பொதுப் போக்குவரத்து சேவை 10 சதவீதம் அதிகரிக்கப்படும். பாதுகாப்புக்காக 800 பேரும், பயணிகள் மற்றும் யாத்திரிகர்களுக்கு வழிகாட்ட 500 பேரும் என மொத்தம் 1,300 கூடுதல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



