பரிஸில் போப்பின் வருகை: Notre-Dame முதல் Saint-Michel வரை சிறப்பு ஊர்வலம்!!

பரிஸில் போப்பின் வருகை: Notre-Dame முதல் Saint-Michel வரை சிறப்பு ஊர்வலம்!!

25 புரட்டாசி 2026 வெள்ளி 15:07 | பார்வைகள் : 1318


போப் லியோன் XIV வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25 இன்று பிற்பகலில், பரிஸ்  5 மற்றும் 6ஆம் வட்டாரங்களில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் செல்லவுள்ளார். இந்தப் பயணம் Notre-Dame-des-Champs தேவாலயத்திலிருந்து தொடங்கி, Saint-Michel சதுக்கம் வரை செல்லும். பொதுமக்கள் இந்த நிகழ்வை இலவசமாகவும், முன்பதிவு இல்லாமலும் காண முடியும்.

இந்த ஊர்வலம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதற்காக பாதை முழுவதும் 23 பாதுகாப்புச் சோதனை நுழைவுப் புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவுப் புள்ளிகள் மதியம் 12  மணி முதல் திறக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்புச் சோதனைகளை சுமுகமாகக் கடக்கவும் மக்கள் முன்கூட்டியே வருமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நுழைவுப் புள்ளிகள் Boulevard Raspail, Boulevard du Montparnasse, Rue Bréa, Rue d’Assas, Rue Soufflot, Rue de Vaugirard, Rue des Écoles, Rue Danton, Rue Saint-Séverin உள்ளிட்ட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பகுதியுக்குள் நுழைந்த பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்படும்; அந்தப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல வேண்டுமெனில் மீண்டும் பாதுகாப்புச் சோதனை வழியாக வெளியேறி நுழைய வேண்டியிருக்கும்.

img_6ab671f9804de.jpg

இந்த ஊர்வலத்திற்குப் பிறகு, போப் லியோன் XIV பரிஸின் Notre-Dame பேராலயத்திற்குச் சென்று மாலைப் பிரார்த்தனையான Vêpres நிகழ்வில் பங்கேற்பார். பின்னர் Stade de France மைதானத்தில் சுமார் 80,000 இளைஞர்கள் பங்கேற்கும் பிரார்த்தனை விழாவில் கலந்து கொள்வார். மறுநாள், செப்டம்பர் 26 அன்று, Place de la Concorde பகுதியில் திறந்தவெளி திருப்பலியும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படிக்க