இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர்
25 புரட்டாசி 2026 வெள்ளி 15:58 | பார்வைகள் : 241
இங்கிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்திற்கு சென்றுள்ள இலங்கை அணி 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
லீட்ஸில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதில், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக, இலங்கை தரப்பில் அணித்தலைவர் குசால் மெண்டிஸ், 100 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 121 ஓட்டங்கள் குவித்தார்.
322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
அதிகபட்சமாக, இங்கிலாந்து தரப்பில் தாமஸ் பாண்டன் 73 ஓட்டங்களும், ஜாஸ் பட்லர் 69 ஓட்டங்களும் குவித்தனர்.
இலங்கை தரப்பில் துனித் வெல்லாளகே 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் மூலம், இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
69 ஓட்டங்களை குவித்த ஜாஸ் பட்லர், ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் இரண்டிலும் சேர்த்து 10,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்த முதல் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
3வது ஒருநாள் போட்டி, செப்டம்பர் 27 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.



