ஜெம் வீரமணி வழக்கு: பெண் அதிகாரிகள் குழு அமைப்பு

ஜெம் வீரமணி வழக்கு: பெண் அதிகாரிகள் குழு அமைப்பு

26 புரட்டாசி 2026 சனி 12:22 | பார்வைகள் : 300


ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கிரானைட் தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி 12 சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2025ம் ஆண்டு அக்டோபரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெம் வீரமணி வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐ.பி.எஸ்., சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணன் மற்றும் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட உதவி கமிஷனர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, 4 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

### சிறப்பு புலனாய்வுக்குழு

போலீஸ் ஐ.ஜி., தேன்மொழி தலைமையில் இந்த சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் போலீஸ் அதிகாரிகளான இணை ஆணையர் திஷா மித்தல் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
 

தொடர்ந்து படிக்க