தவெகவில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு பதவி: விஜய் அறிவிப்பு

தவெகவில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு பதவி: விஜய் அறிவிப்பு

26 புரட்டாசி 2026 சனி 14:33 | பார்வைகள் : 859


த.வெ.க.,வில் இணைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உள்ளிட்ட பலருக்கு துணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வழங்கி, அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களது கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்களில் பலருக்கு இதுவரை கட்சியில் உரிய பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், த.வெ.க.,வில் இணைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உள்ளிட்ட பலருக்கு துணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார்.

### துணை பொதுச் செயலாளர்கள்

* எம்.எஸ்.எம். ஆனந்தன் – திருப்பூர் வடக்கு
* எம்.சி. சம்பத் – கடலூர்
* உடுமலை ராதாகிருஷ்ணன்
* கே.வி. ராமலிங்கம் – ஈரோடு மேற்கு
* எம். ஆனந்தன் – உளுந்தூர்பேட்டை
* கடம்பூர் ராஜூ – கோவில்பட்டி
* கே.டி. பச்சைமால் – கன்னியாகுமரி
* வெல்லமண்டி நடராஜன் – திருச்சி கிழக்கு
* என்.ஆர். சிவபதி – முசிறி
* வைகைச்செல்வன் – விருதுநகர்
* வளர்மதி – ஸ்ரீரங்கம்
* சந்தீப் ஆனந்த் – சென்னை
* முத்து வெங்கடேஸ்வரன் – திருப்பூர்
* தொள்ளமூர் கண்ணன் – விழுப்புரம்
* வி.சி.ஆர். குமரன் – திருவள்ளூர்

பொள்ளாச்சி முன்னாள் எம்.பி., மகேந்திரன், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள அனைவரும், பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்ந்து படிக்க