எஸ்.ஐ.ஆர். மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சி: மம்தா குற்றச்சாட்டு

எஸ்.ஐ.ஆர். மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சி: மம்தா குற்றச்சாட்டு

27 புரட்டாசி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 179


மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்ற உதவும் வகையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர். மேற்கொண்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சிராம்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொண்டு, வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதன் மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்ற உதவியது. தேர்தல் ஆணையத்தை பாஜக எவ்வாறு பயன்படுத்தியது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யும் வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் தொடரும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
 

தொடர்ந்து படிக்க