அதிமுகவுக்கு திமுக ஆதரவு: அருண்ராஜ் குற்றச்சாட்டு

அதிமுகவுக்கு திமுக ஆதரவு: அருண்ராஜ் குற்றச்சாட்டு

28 புரட்டாசி 2026 திங்கள் 09:37 | பார்வைகள் : 158


த.வெ.க.,வினரின் பிரசாரத்தை தடுக்க தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டினார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அவர் அளித்த பேட்டி:

இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க.,வினரின் பிரசாரத்தை தடுக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த 10 பேர் இருசக்கர வாகனங்களில் வந்து அடாவடியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு, எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தி.மு.க., மூத்த தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக அருண்ராஜ் குற்றம் சாட்டினார்.

இதன் மூலம் தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து செயல்படுவது வெளிப்படையாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளூர் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து த.வெ.க.,வின் பிரசாரத்தை முடக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அ.தி.மு.க.,வுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தி.மு.க.,வினர் உடனடியாக ஆதரவாக வருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அருண்ராஜ் கூறினார்.

பெண்களை இழிவாக பேசுவது தி.மு.க.,வின் மரபணுவிலேயே ஊறிப்போன ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க