திமுகவினர் என்றாலே ஆபாசம் தான்; அமைச்சர் நிர்மல்குமார் ஆவேசம்

திமுகவினர் என்றாலே ஆபாசம் தான்; அமைச்சர் நிர்மல்குமார் ஆவேசம்

28 புரட்டாசி 2026 திங்கள் 10:43 | பார்வைகள் : 163


உதயநிதி பகல் நேரத்திலேயே நிதானமின்றி பேசத் தொடங்கிவிட்டதாகவும், தி.மு.க.,வினர் என்றாலே ஆபாசமாக பேசுபவர்கள் என்ற நிலை இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

**மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:**

உதயநிதி பகல் நேரத்திலேயே நிதானமின்றி பேசத் தொடங்கிவிட்டார். விரக்தியின் உச்சத்தில் அவர் மிகவும் மோசமாக பேசி வருகிறார். அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் எப்படிப்பட்ட நபர், அவரது குடும்பத்தினர் எப்படிப்பட்டவர்கள் என்பது தற்போது தான் வெளிப்படுகிறது. அவர்களை திருத்த முடியாது.

அவரது மனதில் உள்ள ஆபாசத்தை மாற்ற முடியாது. இவ்வாறு ஆபாசமாக பேசும் உதயநிதியை நம்பி அந்த கட்சியில் தொடர்ந்து பயணிக்கலாமா என்றும், அந்த கட்சிக்கு பெண்கள் ஆதரவு அளிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார். தி.மு.க.,வில் பெண்கள் யாரும் சேர்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உதயநிதி போன்ற ஒருவர் பேசும் நிலையில், தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்றும் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். பிரசாரத்தில் அவருக்கு பின்னால் ஒரு பெண் வேட்பாளர் இருக்கும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் உதயநிதி ஆபாசமாக பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

அந்த பெண் வேட்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை வீடியோவில் அனைவரும் பார்த்திருப்போம். அவர் அங்கும் இங்கும் திரும்பிப் பார்ப்பது அதில் தெரிகிறது. அரசியலுக்கு தகுதியில்லாத நபர் உதயநிதி என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.

ஆட்சி, அதிகாரம், பணம் ஆகியவற்றைத் தவிர, அவர்களது குடும்பத்தினருக்கு வேறு எதைப் பற்றியும் கவலை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் சில வழக்குகளுக்கு மட்டும் ஆர்.டி.ஐ.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளை, 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.
 

தொடர்ந்து படிக்க