மாற்றத்தை உருவாக்குங்கள்: துக்காராம் அறிவுறுத்தல்
28 புரட்டாசி 2026 திங்கள் 12:49 | பார்வைகள் : 175
தலைமை என்பது ஒருவர் பெற்றிருக்கும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல; அவர் உருவாக்கும் மாற்றத்தைப் பொறுத்தது. எனவே, மாற்றத்தை உருவாக்குபவராக இருக்க வேண்டும் என மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே அறிவுறுத்தியுள்ளார்.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பணியாற்றி வருகிறார். அவரது அதிரடி நடவடிக்கைகளால் மும்பை உணவகங்களில் தூய்மை மற்றும் உணவின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அவரது நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
'மாற்றத்தை உருவாக்குபவராக இருங்கள்' என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தலைமை என்பது ஒருவர் பெற்றிருக்கும் அதிகாரத்தை சார்ந்தது அல்ல; அவர் உருவாக்கும் மாற்றத்தைப் பொறுத்தது. மக்களின் பங்களிப்பு இல்லாமல் கொள்கைகள் மற்றும் நல்லாட்சி மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. மக்களுடன் இணைந்துதான் நல்லாட்சியை உருவாக்க வேண்டும்.
பொதுத் தலைமை என்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன், அவர்களிடம் பொறுப்புணர்வை ஏற்படுத்தி, மாற்றத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
ஒரு தனிநபரால் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது முக்கியமல்ல.
இவ்வாறு துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.



