வெஜ் புலாவ்

வெஜ் புலாவ்

28 புரட்டாசி 2026 திங்கள் 04:02 | பார்வைகள் : 224


வார விடுமுறை என்றாலே வீட்டில் கட்டாயம் ஏதாவது ஒரு அசைவ உணவு நிச்சயம் இருக்கும். அன்றைய நாள் சிக்கன், மட்டன், மீன் என வீடே மணக்கும். ஆனால் புரட்டாசி வந்துவிட்டால் ஒரு மாதத்திற்கு அசைவ உணவுகளை மறந்துவிட வேண்டியதுதான்.

ஆனால் ஞாற்றுக்கிழமை வந்துவிட்டாலே சிக்கன், மீன், மட்டன் சாப்பாடு பற்றி தான் நினைக்க தோன்றும். எனவே புரட்டாசி மாதத்தில் அந்த ஏக்கத்தை குறைக்க அசைவ பிரியாணிகளையே சுவையில் மிஞ்சும் வகையில் எப்படி வெஜ் புலாவ் செய்யலாம் என்று தான் இங்கே பார்க்க போகிறோம்...

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 1 கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
பீன்ஸ் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பழுத்த தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

பாசுமதி அரிசியை இரண்டு மூன்று முறை நன்றாக அலசி சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரிஞ்சி இலை, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்கவும்.


தற்போது இதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கி பிறகு அதில் ஒரு டம்ளர் அளவு பாசுமதி அரிசிக்கு 1 1/2 டம்ளர் அளவு தண்ணீரை

அடுத்து அதில் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு நன்றாக கொதிக்க விட்டு தேவையென்றால் உப்பு சேர்த்து தண்ணீர் 80% வற்றியவுடன் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.

இறுதியாக புலாவின் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி வெங்காய பச்சடி, காளான் கிரேவி, வெஜ் குருமா, வெஜ் கிரேவி என சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்...

தொடர்ந்து படிக்க