2027 ஜனாதிபதித் தேர்தல்: Marine Le Pen முன்னிலை – கருத்துக்கணிப்பில் தகவல்!!

2027 ஜனாதிபதித் தேர்தல்: Marine Le Pen முன்னிலை – கருத்துக்கணிப்பில் தகவல்!!

28 புரட்டாசி 2026 திங்கள் 07:14 | பார்வைகள் : 2235


2027ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் Marine Le Pen 35 முதல் 36 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பார் என புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக La France insoumise கட்சியின் Jean-Luc Mélenchon 18 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கக்கூடும் எனவும், Le Havre நகர மேயரும் முன்னாள் பிரதமருமான Édouard Philippe 16 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசியல் அணியின் வேட்பாளராக Édouard Philippe போட்டியிட்டாலும், Gabriel Attal போட்டியிட்டாலும், சமூக ஜனநாயக வேட்பாளர்களில் Raphaël Glucksmann, François Hollande-ஐவிட அதிக வாக்குகளைப் பெறக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது. Raphaël Glucksmann 10 முதல் 11 சதவீத வாக்குகளையும், François Hollande 7 முதல் 8 சதவீத வாக்குகளையும் பெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் பிரதமர் Gabriel Attal 12 முதல் 13 சதவீத வாக்குகளுடன் Édouard Philippe-ஐவிடப் பின்தங்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீவிர வலதுசாரி Reconquête கட்சியின் Éric Zemmour 5 முதல் 6 சதவீத வாக்குகளையும், Marine Tondelier 3 முதல் 5 சதவீத வாக்குகளையும், Fabien Roussel 2 முதல் 3 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும் எனக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. Nicolas Dupont-Aignan 2 சதவீத வாக்குகளைப் பெறலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை கருத்துக்கணிப்பு மதிப்பீடுகளே தவிர, தேர்தல் முடிவுகள் அல்ல.

தொடர்ந்து படிக்க