பிக்பாஸ் தொடர்பில் விஜய்சேதுபதியின் அதிரடி அறிவிப்பு!
28 புரட்டாசி 2026 திங்கள் 12:30 | பார்வைகள் : 4489
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டி ஒரு முக்கியமான திருப்புமுனையை நோக்கி நகர்கிறது. இதுவரை போட்டியாளர்களால் வெளியேற்றப்படுவது நியாயமாக இருக்காது என ரசிகர்கள் குமுறி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றைய எபிசோட்டில் மூன்று பேரும் மீண்டும் வீட்டுக்குள்ளே அனுப்பப்பட்டனர்.
சக போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட லட்சுமி பிரியா, ஜாவீத், சவின்யா ஆகிய 3 பேரும் மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 3 கயிறுகள் கொடுத்து ஒரு முனையை அவர்கள் பக்கமும் மறுமுனையை ஒருவரை தேர்வு செய்து கோர்க்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டது. அதை யாரும் எக்காரணத்தை கொண்டு 1 வாரத்திற்கு கழற்ற கூடாது என்றும் மீறி கழற்றினால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் ஜாவீத் தன்யாவையும், லட்சுமி பிரியா குமரனையும், சவின்யா அன்சிதாவையும் தேர்வு செய்து கூடவே அழைத்து சுற்றுகின்றனர். இதில் யார் ஒரு கட்டத்திற்கு மேல் வெடித்து கயிற்றை கழற்றி வெளியேறுவார்கள் என்று பார்க்கலாம். இதில் மேலும் சுவாரஸ்யமாக, விஜய்சேதுபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எவிக்ஷன் Free Pass என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக 3 எவிக்ஷன் Free Pass உள்ளதாகவும், அதில் உங்கள் ஆட்டத்தை பொறுத்து இந்த பாஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அப்படி இந்த பாஸ்-ஐ பெறும் நபர்கள் 70 நாட்கள் அதாவது 10வது வாரம் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுவும் 3 பேருக்கு கிடைக்கவுள்ளதால் போட்டியாளர்கள் சர்ப்ரைஸ் அடைந்துள்ளனர். இது யாருக்கு கிடைக்கப்போகுது என்று பார்க்கலாம்.



