முதல்-அமைச்சர் விஜய் என்ன சாதனை செய்துள்ளார்?எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் விஜய் என்ன சாதனை செய்துள்ளார்?எடப்பாடி பழனிசாமி

29 புரட்டாசி 2026 செவ்வாய் 06:59 | பார்வைகள் : 212


அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அ.தி.மு.க., கரைந்து விடும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். அ.தி.மு.க., என்ன சர்க்கரையா, கரைந்து போவதற்கு? அ.தி.மு.க., இரும்பு போன்றது; அதை யாராலும் அசைக்க முடியாது.

எடப்பாடி தொகுதியில் விஜய் பிரசாரம் செய்திருந்தால், எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்திருப்பார் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். எடப்பாடி தொகுதி எப்படிப்பட்ட தொகுதி என்பது மக்களுக்கு தெரியும். கூட்டணியில் இல்லாத நிலையிலேயே 45 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்ற தொகுதி அது.

உங்கள் தலைவர் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவரா? தமிழகத்துக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தந்தாரா? அவர் செய்த சாதனை என்ன?

முதல்-அமைச்சர் விஜய் 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், ஒரு தேசிய விருதைக்கூட அவரால் பெற முடியவில்லை. எங்களை அரசியலில் வீழ்த்த வேண்டும் என நினைத்தால், நீங்கள்தான் அரசியல் களத்தில் காணாமல் போய்விடுவீர்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
 

தொடர்ந்து படிக்க