ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளது; முதல்வர் விஜய்

ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளது; முதல்வர் விஜய்

29 புரட்டாசி 2026 செவ்வாய் 08:04 | பார்வைகள் : 278


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய முதல்-அமைச்சர் விஜய், கோவில் அலுவலகத்தில் முன்னதாக, 'ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளது' என உறுதிமொழி அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

ஹிந்து கோவில்களில் ஹிந்து அல்லாத பிற மதத்தினர் சென்று வழிபட அனுமதி இல்லை. மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் வழிபட விரும்பினால், 'தனக்கு ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளது' என உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.

முதல்-அமைச்சர் விஜய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர திட்டமிட்டிருந்ததை முன்னிட்டு, அவரிடம் முன்கூட்டியே இந்த உறுதிமொழி படிவம் பெறப்பட்டிருந்தது.

இதையடுத்து கோவிலுக்கு வந்த விஜய், நேரடியாக சென்று மீனாட்சி அம்மனையும், சுவாமியையும் தரிசித்து வழிபட்டார்.
 

தொடர்ந்து படிக்க