நீக்கியது நல்லவேளை; இன்று அமைச்சராகிவிட்டேன்: செங்கோட்டையன்
30 புரட்டாசி 2026 புதன் 09:25 | பார்வைகள் : 549
“நல்ல வேளை இபிஎஸ் என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டார். நான் இன்று அமைச்சராகிவிட்டேன். தப்பித்தேன் சாமி” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
“துரோகத்தை செய்தவர் இபிஎஸ். அவரைப் பொறுத்தவரை இன்று ஒன்றை நான் தெளிவாகக் கூறுகிறேன். அவர் அனைவருக்கும் துரோகம் செய்ததன் அடிப்படையில்தான் அதிமுக சிதைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
நல்ல வேளை இபிஎஸ் என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டார். நான் இன்று அமைச்சராகிவிட்டேன். தப்பித்துவிட்டேன் சாமி. தலைவர் அருகில் வராமல் இருந்திருந்தால், மூன்றாவது இடத்தில் அமர்ந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இபிஎஸ் நல்ல வேலை செய்தார். கட்சியை விட்டு என்னை நீக்கினார். தலைவர் விஜய் என்னை தூக்கிப்பிடித்து அமைச்சராக்கிவிட்டார். இது வரலாறு.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இயக்கம்தான் தமிழக வெற்றி கழகம். அதன் தலைவர் விஜய். உங்களை யாராலும் கட்டுப்படுத்தவும் முடியாது, அடக்கவும் முடியாது. அடக்குபவர்களை அடக்கித் தீருவோம். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
ஊருக்காக கொடுக்கும் தலைவர் வந்துவிட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். இங்கு இருக்கும் மக்களும் கவலைப்பட வேண்டாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் 25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும். அனைவருக்கும் இடம் வழங்கப்பட்டு, ரூ.5 லட்சத்தில் வீடு கட்டித் தரப்படும். எனவே, கவலைப்படாதீர்கள்.
இந்தத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்ற வரலாற்றை படைக்க வேண்டும்.”
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.



