சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

30 புரட்டாசி 2026 புதன் 13:38 | பார்வைகள் : 5936


எரிசக்தி விலையேற்றத்துக்கு வழிவகுக்கும் விநியோகத் தடைகள் நிலவி வரும் நிலையில், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடல் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் என பொதுத்துறை நிறுவனமான 'ஆயில் இந்தியா லிமிடெட்' (OIL)-ன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

**நெருக்கடிகளுக்கு மத்தியில்**

இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் அதிகமான அளவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதையே நம்பியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் மதிப்புமிக்க அன்னியச் செலாவணி பெருமளவில் வெளியேறுகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் சர்வதேச சந்தை நெருக்கடிகள் காரணமாக, இந்த நிலை நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் கடுமையான சரிவை ஏற்படுத்துவதுடன், உள்நாட்டில் பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறையையும் தூண்டுகிறது. இதனால் பொதுமக்களின் வாங்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.

**உள்நாட்டு உற்பத்தி**

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு தடையற்ற எரிசக்தி விநியோகம் மிகவும் அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

உள்நாட்டில் ஏற்கனவே உள்ள எண்ணெய் வளங்களை மீண்டும் தோண்டியெடுப்பதுடன், புதிய எண்ணெய் வளங்களைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, நாட்டின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.”

**பொருளாதார வளர்ச்சி - புதிய உச்சம்**

மேலும் அவர் கூறுகையில், “வெளிநாட்டு இறக்குமதிச் சுமையைக் குறைக்கும் வகையில், இந்தியாவின் தரைப்பகுதிகளில் மட்டுமின்றி, ஆழ்கடல் பகுதிகளிலும் புதிய எண்ணெய் கிணறுகளைக் கண்டறியும் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், எரிசக்தித் துறையில் இந்தியா சுயசார்பு அடைவதுடன், நுகர்வோருக்கும் தடையற்ற வகையில் எரிபொருட்கள் கிடைக்க வழிவகை ஏற்படும். இந்த உத்தி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

**கனடா - அமெரிக்கா இடையே வர்த்தக தடை அமல்**

அமெரிக்கா மற்றும் கனடா இடையே சுங்க வரி விதிப்பு தொடர்பாக கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி விதிப்பு தொடர்பான தடை நேற்று முதல் அமலுக்கு வந்ததாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதையடுத்து, ரூ.9,600 கோடி (1 பில்லியன் டாலர்) மதிப்பிலான மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா நேற்று முதல் அதிரடித் தடை விதித்துள்ளது.
 

தொடர்ந்து படிக்க