தவெகவில் இணைந்தார் அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை
1 ஐப்பசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 293
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். அவருக்கு கட்சித் துண்டை அணிவித்து தவெக தலைவர் விஜய் வரவேற்றார்.
செம்மலை, 1980-ம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1984, 2001 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2009-ம் ஆண்டு சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்தார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில், இன்று (செப். 30) தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க விஜய் வந்தார். அவரை செம்மலை வரவேற்றார். அப்போது செம்மலைக்கு தவெக கட்சித் துண்டை அணிவித்து விஜய் வரவேற்றார்.



