விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை உறுதி: மோடி
1 ஐப்பசி 2026 வியாழன் 06:37 | பார்வைகள் : 160
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, கோதுமையின் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,610 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், கடலை, பருப்பு, கடுகு உள்ளிட்ட 6 முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதுடன், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 2027-28 ஆண்டுக்கான ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாய சகோதர, சகோதரிகள் தங்களது விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெறுவது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



