“ஜேசன் சஞ்சய்க்கு திடீர் உடல்நலக்குறைவு!

“ஜேசன் சஞ்சய்க்கு திடீர் உடல்நலக்குறைவு!

30 புரட்டாசி 2026 புதன் 17:13 | பார்வைகள் : 9829


ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள ‘சிக்பா’ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஜேசன் சஞ்சய் பல்வேறு ஊர்களுக்குத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு திடீரென வைரஸ் தொற்று ஏற்பட்டு உடல்நலக் குறைவுதியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக சென்னையில் இன்று நடைபெற்ற படத்தின் மிக முக்கியமான நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது. இது குறித்துப் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தமிழ் குமரன், தவிர்க்க முடியாத காரணத்தினாலும் உடல்நலப் பாதிப்பினாலும் அவர் வரவில்லை என்றும், படம் வெளியான பிறகு ஜேசன் சஞ்சய் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுவார் என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ஜேசன் சஞ்சய் இப்படத்தை மிகவும் சிறப்பான முறையில் இயக்கியுள்ளதாகவும், இந்தப் படத்தின் மிகப்பெரிய தூணே அவர்தான் என்றும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். படத்திற்கான அனைத்துப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இனி இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு பத்திரிகையாளர்களிடமும் பொதுமக்களிடமும் உள்ளது என்று தயாரிப்பாளர் தமிழ் குமரன் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படிக்க