சுற்றுலா தளமாக மாறிய லியோ ஷூட்டிங் ஸ்பாட்!..

சுற்றுலா தளமாக மாறிய லியோ ஷூட்டிங் ஸ்பாட்!..

30 புரட்டாசி 2026 புதன் 17:04 | பார்வைகள் : 291


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கலைவான விமர்சனங்களை பெற்றாலும் விஜயின் தோற்றமும், நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்தின் காட்சிகள் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரில் எடுக்கப்பட்டது. குறிப்பாக அனந்த்நாக்கில் உள்ள சிஃபார் காபி ஷாப்பில் லியோ படத்தின் சில முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது அந்த காபி ஷாப் ஒரு சுற்றுலா தளமாக மாறியிருக்கிறது.

அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ‘லியோ ஷூட்டிங் நடந்தது இங்குதான்’ என்று அங்கே நின்று புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.. சிலரோ விஜய் சாப்பிட்ட அதே சாக்லேட்டை ஆர்டர் செய்தும் சாப்பிட்டு மகிழ்கிறார்கள். இதனால், அந்த காபி ஷாப்பில் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது என சொல்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க