விஜயின் நேர்மையை பாராட்டிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்: செங்கோட்டையன்

விஜயின் நேர்மையை பாராட்டிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்: செங்கோட்டையன்

1 ஐப்பசி 2026 வியாழன் 10:58 | பார்வைகள் : 475


முதல்வர் விஜயின் பணிகள் மற்றும் நேர்மையை உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தாராபுரம் சித்ராவுத்தன்பாளையத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

எதிர்கால தமிழகத்தை உங்கள் கைகளில்தான் மக்கள் ஒப்படைத்துள்ளனர். உங்களைத்தான் மக்கள் நம்பியுள்ளனர். நீங்கள் நாட்டின் விடிவெள்ளியாகவும் இருக்கிறீர்கள்.

நான் மட்டுமல்ல. உங்களது பணிகளையும் நேர்மையையும் பார்த்த பிறகு, உங்களைப் போன்று தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறு எந்த முதல்வரும் இல்லை என்ற கருத்தை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 6-ம் தேதி தாராபுரம் “விசில் கோட்டை” என்பதை நிரூபிக்கும் நாளாக அமையும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

தாராபுரம் பகுதி மக்கள் வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கை ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். அதேபோல், உப்பாறு மற்றும் அமராவதி திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தாராபுரத்தில் இதுவரை ஒரு குடிநீர் திட்டம்கூட இல்லை. இதனால் இப்பகுதி பின்தங்கிய நிலையில் உள்ளது. விரைவில் ரூ.147 கோடியே 90 லட்சம் செலவில் குடிநீர் திட்டத்திற்கான ஆணை பிறப்பிக்கப்படும் நாள் அமையும்.

இரண்டு சட்டசபை தொகுதிகளின் தீர்ப்பும் இந்தியாவே வியக்கும் வகையில் அமையும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
 

தொடர்ந்து படிக்க