டிரம்புடன் மோடி பேச்சு: வர்த்தகம், எரிசக்தி ஆலோசனை

டிரம்புடன் மோடி பேச்சு: வர்த்தகம், எரிசக்தி ஆலோசனை

1 ஐப்பசி 2026 வியாழன் 11:06 | பார்வைகள் : 185


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தேன். நமது விரிவான சர்வதேச உத்திசார் கூட்டாண்மையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக தொடர்ந்து கலந்தாலோசிப்பது என ஒப்புக்கொண்டோம்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
 

தொடர்ந்து படிக்க