இலங்கையின் பல பகுதிகளில் திடீர் எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கையின் பல பகுதிகளில் திடீர் எரிபொருள் தட்டுப்பாடு

30 புரட்டாசி 2026 புதன் 19:09 | பார்வைகள் : 384


இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்ற ஊகத்தால், நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.

விலை உயர்வு குறித்த எதிர்பார்ப்பால் சில பகுதிகளில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் விலைகள், ஒரு லீற்றருக்கு, ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ. 299

ஒக்டேன் 95 பெட்ரோல் – ரூ. 365

ஒட்டோ டீசல் – ரூ. 284

சூப்பர் டீசல் – ரூ. 332

எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, தற்போதைய விலைகளே அமலில் உள்ளன.

 

தொடர்ந்து படிக்க